கூட்டுறவு துறையில் பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறையில் காலியாக இருந்த இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் பணியிடங்களுக்கு, தகுதி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி கருவடிகுப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து பாண்லே நிறுவனத்தில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கினார்.பின்னர், புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக் கிளைகளின் மூலம் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 70 மகளிருக்கு ரூ.83.50 லட்சம் கடனுதவியையும், சிறந்த வங்கிக் கிளைகளுக்கு விருதுகளையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய ஐஸ்கிரீம்
இந்த கோடையில், பாண்லே நிறுவனத்தில் வெண்ணிலா சாக்கோ சிப்ஸ், பிளேக் கரண்ட் ஆகிய ஐஸ்கிரீம் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. 250 மி.லி 75 ரூபாய், 500 மி.லி 140 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.