உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் ஜிப்மர் இயக்குனர் வீடு முற்றுகை

மின்வெட்டை கண்டித்து நள்ளிரவில் ஜிப்மர் இயக்குனர் வீடு முற்றுகை

புதுச்சேரி: தொடர் மின்வெட்டை கண்டித்து ஜிப்மர் இயக்குனர் வீட்டை குடியிருக்கும் ஊழியர்கள், முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. ஜிப்மர் வளாகத்தில் இயக்குனர் வீடு அருகே, ஊழியர்களின் குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக இரவில் அடிக்கடி மின்வெட்டு இருந்து வருகிறது. அதனால், குடியிருப்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி, குடியிருக்கும் ஊழியர்கள் பல முறை இயக்குனரை சந்தித்து முறையிட்டனர். கடந்த இரண்டு நாட்களாக இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இரவில் துாங்க முடியாமல், அவதிப்பட்ட எச், ஜி. டைப் 1, டைப் 2 பிளாக் பகுதியில் குயிருப்பவர்கள் நேற்று இரவு 10:00 மணி அளவில், இயக்குனர் வீட்டு முன்று அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஜிப்மர் வளாத்தில் கட்டப்பட்டு வரும், ஹாஸ்டல் கட்டுமான இடத்திற்கு குடியிருப்பு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மில் இருந்து மின்சாரம் எடுத்து செல்வதால், மின்பற்றாகுறை ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படுவதாகவும், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என, போராட்டம் நடத்திவர்கள் கோஷம் எழுப்பினர்.தகவலறிந்து வந்த, டி.நகர் போலீசார் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை