உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் டாக்டர் போராட்டம் காலை இழந்த மாணவர்

ஜிப்மர் டாக்டர் போராட்டம் காலை இழந்த மாணவர்

வில்லியனுார்:புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர்பேட் சரவணன், 23, மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வருகிறார். இவரை கடந்த, 18ம் தேதி ஏழு பேர் கும்பல் தாக்கியது. சரவணன் வலது காலில், இரண்டு இடங்களில் கும்பல் கத்தியால் குத்தியதில் அவர் மயங்கி விழுந்ததும் கும்பல் தப்பியது. மயங்கி கிடந்த சரவணனை மீட்டு, அரியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.காயம் அதிகமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பினர். கோல்கட்டாவில் பெண் மருத்துவர்படுகொலையை கண்டித்து, ஜிப்மர் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், சரவணனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை; கட்டு போட்டு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வீட்டிற்கு சென்ற சரவணனுக்கு உடல்நிலை மோசமானது. அவரை காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்ததில், காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு சரியான சிகிச்சை அளிக்காததால் நரம்புகள் அழுகி விட்டதாகவும், காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர்.அதை தொடர்ந்து அவரது வலது காலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி அகற்றி, தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ