| ADDED : ஜூன் 19, 2024 05:29 AM
புதுச்சேரி : புதுச்சேரி கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.புதுச்சேரி சங்கர நேத்ராலயா ஆக்கு பேஷ்னல் ஆப்டோ மெட்ரி சர்வீஸ், தாஸ்யா தொண்டு நிறுவனம் மற்றும் கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை இரண்டு நாட்கள் முகாமில், நேற்று நடுக்குப்பம் பகுதியில் துவங்கியது.முகாமில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையாளர் புகேந்தரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். நகர் மன்ற துணைத் தலைவர் ஜீனத் பீவி, கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சக்தி, நகர் மன்ற உறுப்பினர் மூர்த்தி, இன்ஸ்பெக்டர் கீர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில், நீரிழிவு நோய், கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, துாரப்பார்வை போன்ற பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை செல்வக்குமார், கிரிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.இன்று இரண்டாம் நாள் முகாமில் சிறப்பு கண் மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்குகின்றனர்.