உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்ணதாசன் பிறந்த நாள் விழா

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம், முதியோர் இல்லம் இணைந்து கண்ணதாசன் பிறந்தநாள் விழா, முதியோர் இல்ல ஆண்டு விழா, நுால் வெளியீட்டு விழா மற்றும் கவியரங்கம் என முப்பெரும் விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கலைவரதன் தலைமை தாங்கினார். கவிஞர் காஞ்சனா வரவேற்றார். வேலுநாச்சியார் இயக்க வாணிகணேசன், பொறுப்பாளர் வெற்றிவேலன், ஆசிரியர் அழகேசன் இளங்குயில், கதிரேசன், நமச்சிவாயம், கவிஞர்கள் பைரவி, மனோஜ்குமார், மதன், அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று, கவியரசரின் குறள்நயம், பாவேந்தரின் தனியுடைமை தமிழ் தேசிய பொதுவுடைமை மற்றும் ஆண்டு விழா நுாலை வெளியிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், மத்திய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், தமிழ்ச் சங்க பொருளாளர் அருள் செல்வம், எஸ்.பி., நித்தியானந்தம், பாவலர் சுந்தர பழனியப்பன், செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை சுதர்சனம், ரத்தின விநாயகம், சத்யா, மஞ்சுளா, தனலட்சுமி,, திவ்யாராமன், ரகு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி