மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
புதுச்சேரி : தமிழகம் புதுச்சேரி மாவட்ட அளவிலான பிளஸ் 2 தேர்ச்சி சதவீத பட்டியலில், காரைக்கால் மாவட்டம் 87.03 சதவீத தேர்ச்சியுடன், கடைசி 40 வது இடம் பிடித்துள்ளது.தமிழகம் புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டது. தமிழகம் 38 மாவட்டமாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தலா ஒரு மாவட்டமாக மொத்தம் 40 மாவட்டங்களாக பிரித்து தேர்ச்சி சதவீதம் அறிவிக்கப்பட்டது.காரைக்கால் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீத பட்டியலில் 87.03 சதவீத தேர்ச்சியுடன், கடைசி 40 வது இடத்தை பிடித்துள்ளது.காரைக்காலில் 11 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள் உள்ளது. இதில், அரசு பள்ளியில் பயின்று தேர்வு எழுதிய 1346 பேரில் 1099 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 81.65 ஆக உள்ளது. தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 805 பேரில், 773 பேர் தேர்ச்சி பெற்று 96.02 தேர்ச்சி சதவீதம் பதிவாகி உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago