உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சவுடாம்பிகை கோவிலில் கத்திப்போட்டு நேர்த்திக்கடன்

சவுடாம்பிகை கோவிலில் கத்திப்போட்டு நேர்த்திக்கடன்

கடலுார் : கடலுார் துறைமுகம் ராமனாதீஸ்வரர் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கத்தி போட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடலுார் துறைமுகத்தில் தெலுங்கு தேவாங்க குல மரபினருக்கு பாத்தியமான பர்வதவர்த்தினி சமேத ராமனாதீஸ்வரர் சவுடாம்பிகை அம்மன் கோவிலில் அம்மன் பண்டிகை உற்சவம் நேற்று நடந்தது. அதனையொட்டி கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கரகத்தின் முன்பு பக்தர்கள் கத்தி போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, ஜோதி தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா, பண்டாரி புறப்படுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ