மேலும் செய்திகள்
வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்
28-Aug-2024
புதுச்சேரி : கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் அமைந்துள்ள கோமாதா கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி பிராமண சமூக நலச் சங்கம் தலைவர் சர்மா மேதா சாஸ்திரிகள் தலைமை தாங்கினார். விழாவையொட்டி, கோமாதாவிற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சாய் சங்கர மடத்தில் உள்ள பசுக்களுக்கு உணவளிக்கப்பட்டது.பின்னர், குருகுல மாணவர்கள் கிருஷ்ணர் வேடம் தரித்து உறியடி உற்சவம் நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணரின் சரித்திரத்தை ஆடியும், பாடியும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.இதில், ராஜா சாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமாக வெண்ணை, முறுக்கு, அப்பம், அவல்பொரி வழங்கப்பட்டது.
28-Aug-2024