உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆற்றங்கரை கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

ஆற்றங்கரை கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் ஆற்றங்கரை சுவாமி கோவிலில், இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது.தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் - வில்லியனுார் சாலையில், ஆற்றங்கரை சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழாவையொட்டி, நேற்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, இன்று இரண்டாம் கால பூஜை, காலை 9:15 மணிக்கு விநாயகர், முருகன், ஆற்றங்கரை சுவாமிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை