மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
20 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
20 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
20 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
20 hour(s) ago
வில்லியனுார்: வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் ஆற்றில் விழுந்தவரை டாட்டா ஏஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, வழியிலேயே இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம்பேட்டை யை சேர்ந்தவர் முனுசாமி, 72; கூலி தொழிலாளி. இவர் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் நேற்று மாலை 100 நாள் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக முனுசாமி ஆற்றில் தவறி விழுந்தார்.அருகே இருந்தவர்கள் அவரை, மீட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் உடல் மோசமான நிலையில் இருந்ததால் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் டிரைவர் இல்லை என, மருத்துவமனை ஊழியர்கள் முனுசாமியை கொண்டு வந்த டாட்டா ஏஸ் வாகனத்திலேயே கையில் ட்ரீப் பாட்டலுடன் அனுப்பி வைத்தனர்.மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர் பரிசோதித்து முனுசாமி வழியிலேயே இறந்துவிட்டாதாக தெரிவித்தார். வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் டிரைவர் இல்லாததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வந்த கூலி தொழிலாளி உயிரை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago