உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சலவை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே நேற்று காலை 10:00 மணியவில் நடந்த போராட்டத்தில், சங்க மாநில தலைவர் ஆறுமுகம், கவுரவ தலைவர் முத்து ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர் முருகன் வரவேற்றார். துணை தலைவர் முனுசாமி, சுப்பிரமணி, கலியமூர்த்தி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பார்த்தசாரதி, துணை தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். எம்.பி.சி., பிரிவுக்கு 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வில்லியனுார் மணவெளி மற்றும் ஏம்பலம் தொகுதியில் புதிய சலவைத் துறைகள் கட்டி தரவேண்டும். மாநிலத்தில் உள்ள சலவை துறைகளை புனரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜென்மராக்கினி மாதா கோவிலில் இருந்து சட்டசபை நோக்கி முற்றுகையிட சென்றனர். பெரியக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்தனர்.சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை