மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி : சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டி.ஐ.ஜி மற்றும் சீனியர் எஸ்.பி.,க்களுடன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. உள்துறை அமைச்சரான நமச்சிவாயம், பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தேர்தல் நன்னடத்தை காரணமாக, மார்ச், ஏப்., மே மாதத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து போலீசாருடன் ஆலோசிக்க முடியவில்லை. தேர்தல் முடிவு கடந்த 4ம் தேதி வெளியானது. தேர்தல் நடத்தை விதிகளும் வாபஸ் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.சட்டசபை வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், துறை செயலர் கேசவன், டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார், சீனியர் எஸ்.பி.,கள் நாரா சைதன்யா, சுவாதி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்னைகள், போதை பொருள் தடுப்பு, போலீசில் காலியாக உள்ள இடங்கள் நிரப்புதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago