உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு

காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு

புதுச்சேரி: காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு நியாய ஒளி திட்டத்தின் கீழ் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறையானது, புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக் கல்லுாரியை, புதுச்சேரி மாநிலத்தில் நியாய ஒளி திட்டத்தை செயல்படுத்த அங்கீகரித்துள்ளது. இத்திட்டத்தின்படி, மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக செந்தில் கல்வியில் கல்லுாரியில் நியாய ஒளி மன்றம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் வழக்கறிஞர் பாலாஜி சிறப்புரை ஆற்றினார். அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று மத்திய சிறை சாலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கான சட்ட பாதுகாப்பு, உரிமைகள், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தினராக சட்ட துறை செயலர் சத்தியமூர்த்தி பங்கேற்று, 'சிறை கைதிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நன்னடத்தை உடைய சிறை கைதிகளுக்கு கிடைக்கக்கூடிய பரோல், தண்டனை குறைப்பு, விடுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப் சிங் சகார், சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன், சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் கைதிகள் எழுப்பிய சட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை