உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என் மீதான குற்றச்சாட்டை நாராயணசாமி நிரூபிக்கட்டும்: அமைச்சர் நமச்சிவாயம் சவால்

என் மீதான குற்றச்சாட்டை நாராயணசாமி நிரூபிக்கட்டும்: அமைச்சர் நமச்சிவாயம் சவால்

புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமி என் மீதான குற்றச்சாட்டினை முதலில் நிரூபிக்கட்டும். அதன் பிறகு பதில் சொல்லுகின்றேன் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: சப் இன்ஸ்பெக்டர் பணியிட தேர்வில் இரண்டு ஆண்டு வயது தளர்வு கேட்டு கோர்ட்டில் சென்று ஆர்டர் வாங்கி வந்துள்ளனர். அதை எதிர்த்து அரசு அப்பீல் செய்துள்ளது. இதன் காரணமாகவே தேர்வு தள்ளிபோகிறது. மத்திய அரசிடம் 2 ஆண்டு வயது தளர்வு கேட்டோம். அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. எனவே கோர்ட்டினை மீண்டும் அணுகி ஆர்டர் வாங்கி பிறகு சப் இன்ஸ்பெக்டர் பணிகள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவலர்கள் பணியிட மாற்றம் திரும்ப பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் காரைக்காலில் உள்ளவர்கள் எங்களை காரைக்காலில் போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதேபோல் பிற பிராந்தியளிலும் கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் தான் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. முன்பு இருந்த ஆட்சியில் திறமை இன்மை காரணமாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம். பாண்டி மெரினாவில் எனக்கு தெரிந்தவர்கள் சட்ட விரோதமாக கட்டடம் கட்டுவதாக முதல்வர் நாராயணசாமி சொல்லியுள்ளார். முதலில் அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும். அதற்கு பின் பதில் சொல்லுகிறேன்.மேலும், காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து என்று சொல்லியுள்ளார். வைத்திலிங்கம் எம்.பி., முதல்வராக இருந்தபோது எம்.பி.,யாக இருந்த நாராயணசாமி புதுச்சேரியில் விடுதலை புலிகள் நடமாட்டம் இருப்பதாக சொன்னார். காங்., ஆட்சியை எதிர்த்தே அவர் பேசியுள்ளார். முன்னாள் முதல்வராக இருந்தும் நாராயணசாமி பொறுப்பற்ற முறையில் பேசுவது அவருக்கு அழகல்ல. அவர் சீனியர். அவருடைய பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை