மேலும் செய்திகள்
78வது சுதந்திர தின விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
16-Aug-2024
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியும், சிறுவர் இலக்கிய இயக்கமும் இணைந்து சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், 59 மாணவர்கள், திருக்குறள் ஒப்பித்தல், 99 வகையான மலர்களின் பெயர்களை மனப்பாடமாக கூறுதல், நாடகம் நடித்தல், தமிழின் மேன்மை குறித்த குழு பாடல் பாடுதல், சமூக சிந்தனையை வளர்க்கக் கூடிய நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக மாணவர்கள் குழந்தை கவிஞர் வள்ளியப்பா படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். இயக்கத்தின் நிறுவனர் பாரதியார் சிவா,. ஆசிரியர்கள், ஆறுமுகம், ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பங்குபெற்ற மாணவர்ளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் குப்பம்மாள், ராமதாசு, இந்திராகாந்தி, பத்மாவதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
16-Aug-2024