| ADDED : ஆக 15, 2024 04:45 AM
புதுச்சேரி: துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரக்கெட் போட்டி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில் ஏனாம் ராயல்ஸ், மாகி மெகலோ டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஏனாம் ராயல்ஸ் அணி 19.4 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பிரேம் ராஜ் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.அடுத்த ஆடிய மாகி மெகலோ டைகர்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரித்தீஷ் 38 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் எடுத்த மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணியின் பாபிட் அஹ்மத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.நேற்று மதியம் நடந்த போட்டியில் வில்லியனுார் மோஹித் கிங்ஸ், மாகி மெகலோ டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பானு ஆனந்த் 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மாகி மெகலோ டைகர்ஸ் அணி தனது அதிரடி ஆட்டத்தால் 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 190 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ராகவன் 50 பந்துகளில் 70 ரன்களும், அஜய் ரோஹீரா 59 பந்துகளில் 111 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்த அஜய் ரோஹீரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.