உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயம் விற்ற நபர் கைது

சாராயம் விற்ற நபர் கைது

புதுச்சேரி, : மண்ணாடிப்பட்டில் மூட்டையில் வைத்து பாக்கெட் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை மண்ணாடிப்பட்டு சாராயக் கடை எதிரே மூட்டையில் வைத்து பாக்கெட் சாராயம் விற்ற விநாயகம்பட்டு ராஜேஸ்வரி நகர் வாசுதேவன், 48; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 400 சாராயப் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ