| ADDED : ஏப் 13, 2024 04:29 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் காதலிக்கு கொடுத்த கடனை திருப்பி கேட்ட மளிகை கடை ஊழியரை கத்தியால் வெட்டிய காதலன் உட்பட ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மங்கலம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன், 53; வில்லியனுாரில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், அதே கடையில் வேலை செய்த தேவிக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார்.இந்நிலையில் தேவி மளிகை கடையில் இருந்து நின்றுவிட்டார். இதனால் பலராமன், தேவியின் வீட்டிற்கு சென்று கடனை திருப்பி கேட்டு, திட்டியுள்ளார். இது குறித்து தேவி தனது காதலன் சிவாவிடம் தெரிவித்தார். ஆத்திரமடைந்த சிவா, மளிகை கடைக்கு சென்று பலராமனை மிரட்டினார். அதனை தொடர்ந்து இரவு பணியை முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்ற பலராமனை, வில்லியனுார் மேலண்டை வீதியில் சிவா தனது நணபர்களுடன் சேர்ந்து கத்தியால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.படு காயடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய பலராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து பலராமன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து வில்லியனுார் பெருமாள் புரத்தை சேர்ந்த சிவா உட்பட அவரது நண்பகள் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.