உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கல்லுாரியில் மேலாண்மை போட்டி, பரிசளிப்பு

மணக்குள விநாயகர் கல்லுாரியில் மேலாண்மை போட்டி, பரிசளிப்பு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் நடந்த மேலாண்மை தொடர்பான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் முதுகலை மேலாண்மைத் துறை சார்பில், 'ட்ரீம்ஸ் 2024' எனும் தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. முதுகலை மேலாண்மைத் துறை டீன் சரவணன் வரவேற்றார். அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜன் விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார். இந்த விழாவில் டாக்டர் வைஷ்ணவி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, டச் சோலார் டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சண்முகானந்தம் சிறப்புரையாற்றினார். இதில் வேலைவாய்ப்பு டீன் கைலாசம் பங்கேற்றார். மாணவ, மாணவியருக்கு மேலாண்மை சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லுாரிகளிலிருந்து140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லுாரி டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் திறமை, புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.நிறைவாக முதுகலை மேலாண்துறையின் பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார். இந்த விழாவை, முதுகலை மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ