உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் நாஜிம் எம்.எல்.ஏ., ஆய்வு

மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் நாஜிம் எம்.எல்.ஏ., ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் மற்றும் அன்னதான கூடத்தை நேற்று நாஜிம் எம்.எல்.ஏ., திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.காரைக்கால் பாரதியார் சாலையில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இந்தாண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது. இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறுவதால் நாகப்பட்டினம் தேசிய நெடுங்சாலை தடுக்கப்பட்டு சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.மாங்கனி திருவிழா ஏற்பாடுகளை தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க புதிதாக அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தை நாஜிம் எம்.எல்.ஏ.,திறந்து வைத்து பார்வையிட்டார்.கோவில் அதிகாரி அருணகிரிநாதன்,கோவில் தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நாஜிம் எம்.எல்.ஏ.,கூறுகையில்., உலக பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்ளுவது வழக்கம். வரும் 21ம் தேதி மாங்கனித்திருவிழா அன்று காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது விடுமுறை அறிவிக்க முதல்வர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை