உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்கம் தொடக்க விழா

திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்கம் தொடக்க விழா

புதுச்சேரி: தமிழ்நாடு அனைத்து திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்கம் இணைந்து தென்னிந்திய திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க தொடக்க விழாவை நடத்தின.புதுச்சேரி செண்பகா ஹோட்டலில் நடந்த விழாவில், தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமை தாங்கினார். புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன் முன்னிலை வகித்தார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். அமைச்சர் சாய் சரவணகுமார், தமிழக எம்.எல்.ஏ., மணி, எம்.எல்.ஏ.,க்கள் ஜான் குமார், பிரகாஷ் குமார் , பொதுச்செயலாளர் சந்திரன், பொருளாளர் மனோகர், சங்க ஆலோசகர் சத்தியசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழகம் மற்றும் புதுச்சேரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.திருமண மண்டபங்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். திருமண மண்டபங்களுக்கு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்தி விதித்துள்ள அரசாணையை குறைக்க வேண்டும். 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். திருமணம் நடைபெறாத நாட்களுக்கு சொத்து வரி, நிலவரி, நீர் வரி, சேவை வரி, விதிப்பதை தவிர்க்க வேண்டும்.புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருமண மண்டபங்களுக்கு அரசின் விதிகளை தளர்த்தி கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ