நரம்பை கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி
பாகூர்: நரம்பை கிராமத்தில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாளித்தனர். கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. பாகூர், கிருமாம்பாக்கம், வள்ளுவர்மேடு, , கந்தன்பேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளினர்.தீர்த்தவாரியில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். நல்லவாடு கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில், நல்லவாடு, தவளக்குப்பம், தானாம்பாளையம், ஆண்டியார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கோவில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தன. பக்தர்கள் கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.