மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி: மின் விபத்தால் பாதிக்கப்படும் மின்துறை ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என ஐ.டி.ஐ., நலசங்கத்தினர் காண்காணிப்பு பொறியாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளராக கனியமுதன் சமீபத்தில் பொறுப்பேற்றார். மின்துறை ஐ.டி.ஐ.,நல சங்க தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் ரவி, துணை பொதுச்செயலாளர் செல்வம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கனியமுதனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர், மின்துறையில் 750க்கும் மேற்பட்ட பொறியாளர், ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் தற்போதுள்ள ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரித்து, மன உளைச்சலில் பணியாற்றுவதால், அடிக்கடி மின் விபத்தில் சிக்கி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மேட்டுப்பாளையத்தில் 2 பேர், சாரத்தில் ஒருவர் என, மொத்தம் 3 ஊழியர்கள் மின் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதற்கு நிரந்தர தீர்வு காண காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிக்கடி மின் விபத்தில் ஊழியர்கள் சிக்கி வருவதால், மின்துறை ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago