உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம்

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நோய்கள் குறித்த மருத்துவ கருத்தரங்கு நடந்தது.கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் நவீன் நாகராஜ் பேசுகையில், 'வலது பக்க முன் சைனஸ், சி.எஸ்.எப்., ரைனோரியா மற்றும் அதற்கான அறுவை சிகிச்சைகள் குறித்து விளக்கினார்.இந்த நோய்க்கான பரிசோதனைகள் குறித்து டாக்டர் ஷைலஜா எடுத்துரைத்தார். தொடர்ந்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ பிரிவின் முதுநிலை மருத்துவ மாணவர்கள் ப்யூலா ஜோசப் மற்றும் டாக்டர் அனிருத் ஆகியோர், இந்நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றியும், அதற்கான சிகிச்சை அளித்தது குறித்தும் விளக்கி பேசினர்.கருத்தரங்கில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை