| ADDED : ஜூலை 14, 2024 05:35 AM
நெட்டப்பாக்கம், : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், வாழை பயிரிடும் விவசாயிகளுக்கு நுண்ணுாட்டச் சத்து இடுதல் குறித்து செயல் விளக்கம் ஏம்பலம் கிராமத்தில் அளிக்கப்பட்டது.கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகம் வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கி, வாழையில் அதிக மகசூல் பெறுவதற்கு நுண்ணுாட்டச்சத்து எந்தெந்த பகுதியில் கொடுப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதில் ஏம்பலம், நத்தமேடு, செம்பியப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு 5 கிலோ நுண்ணுாட்டச்சத்து பவுடர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் அலுவலக ஊழியர் தம்புசாமி செய்திருந்தார்.மருத்துவர் செல்வமுத்து நன்றி கூறினார்.