உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமெரிக்காவில் இந்திய துாதர்களுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

அமெரிக்காவில் இந்திய துாதர்களுடன் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த, அமைச்சர் லட்சுமி நாராயணன், அமெரிக்காவில் இந்திய துாதர்களை சந்தித்து ஆலோ சனையில் ஈடுபட்டார்.சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின், இந்திய துாதர் பினாய் ஸ்ரீகாந்த் பிரதான் மற்றும் துணை துாதர் வருண் ஜெப் ஆகியோர் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.நியூயார்க் நகரில் உள்ள, இந்திய துாதுவர் மாளிகையில் சந்திப்பு நடந்தது. இந்திய துாதரக அதிகாரிகள், புதுச்சேரி சுற்று லாவை மேம்படுத்துவதற்கு அனைத்து வித உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், புதுச்சேரி அரசுடன் அமெரிக்க இந்திய துாதரகம் இணைந்து செயல்படும் என, தெரிவித்தனர்.மேலும் சுற்றுலா சார்ந்த தொழிலதிபர்கள், ேஹாட்டல், தங்கும் விடுதி உரிமை யாளர்கள் மற்றும் சுற்றுலா அமைப்பாளர்கள் ஆகி யோருடன் புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த, முதற்கட்டமாக, காணொளி வாயிலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.தொடர்ந்து, இந்திய துாதரகம் சார்பில் புதுச்சேரி சுற்றுலா மற்றும் தொழில் நுட்ப துறையில், கட்டமைப்புகள், மேம்பாடு முதலீடுகள் என, பல்வேறு நிலைகளில், முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை