உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர், சமூக நலத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

மகளிர், சமூக நலத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறையின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை தாங்கினார். அரசு செயலர் முத்தம்மா, மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் முத்துமீனா, சமூக நலத் துறை இயக்குனர் ராகிணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தின்போது அமைச்சர் தேனீஜெயக்குமார், மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி ஊழியருக்கு ஐந்து மாத சம்பளம், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 10 மாத தொகுப்பூதியம் நிலுவையில் உள்ளது. இவற்றை விரைந்து வழங்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையில் உள்ளது போல் ஈமச்சடங்கு நிவாரண நிதி உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர், சட்டசபையில் கொடுத்த வாக்குறுதியின் படி அவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதி திட்டம் எந்த நிலையில் உள்ளது என, கேள்வி எழுப்பினார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பயனடைந்த பயனாளிகள் எத்தனை பேர், செலவிடப்பட்ட நிதி, எவ்வளவு போக்சோ வழக்குகள், அதனுடைய தற்போதைய நிலை பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக நல அதிகாரியின் காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்ப வேண்டும். போர்வை மற்றும் காலணிகள் வழங்குவதற்கு பயனாளிகளின் வயது உச்சவரம்பை தளர்த்தி கூடுதல் பயனாளிகளை இணைக்க வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ