உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் பறிப்பு; சிதம்பரம் வாலிபர்கள் கைது

மொபைல் போன் பறிப்பு; சிதம்பரம் வாலிபர்கள் கைது

புதுச்சேரி : புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் செந்தில்குமார்,37; மளிகை கடை நடத்தி வரும் இவர் நேற்று முன்தினம் இரவு வழுதாவூர் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது, பின்னால், பைக்கில் வந்த இருவர், செந்தில்குமார் வைத்திருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு சென்றவர்கள், சற்று துாரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.அவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த ரஞ்சித்,21; கோகுல்ராஜ்,21; என்பதும், இருவரும் புதுச்சேரிக்கு வந்து மது குடித்துவிட்டு செல்லும்போது, மொபைல் போனை பறித்து சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை