மேலும் செய்திகள்
ஒப்பந்த பணியாளர் மாயம்; தாய் புகார்
01-Aug-2024
புதுச்சேரி: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.முதலியார்பேட்டை, கலைவாணி வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 40. புதுச்சேரியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 12 வயதில் மகள் உள்ளார். கடந்தாண்டு மார்ச் மாதம் 25ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் குப்பம்மாள் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Aug-2024