உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

லாஸ்பேட்டை பகுதியில் கொசு மருந்து தெளிப்பு

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், கருவடிக்குப்பம் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கருவடிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகி வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து, உழவர்கரை நகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதையடுத்து,  உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு உத்தரவின் பேரில், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கருவடிக்குப்பம், சாந்தி நகர், லட்சுமி நகர், நெசவாளர் நகர் பகுதிகளில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில், கொசு மருந்து தெளித்தனர். அதே போன்று, காலியான இடங்கள், சாலைகள், குப்பைகள் கிடந்த இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை