உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்

பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சினிமா நடிகை தமன்னா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்ற தொடக்க விழாவுடன், கோவையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்றுள்ளார். முதலீடு செய்தவர்களின் தொகைக்கு ஏற்ப, நடிகை காஜல் அகர்வாலை வைத்து 100 நபர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். அதேபோல, மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை நடத்தி, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணத்தை திரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ஜெயின்,36, அரவிந்த் குமார்,40, ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

DARMHAR/ D.M.Reddy
மார் 01, 2025 02:56

நடிகைகளுக்கா தெரியாது இப்படிப்பட்ட வழக்குகளிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்வதென்று.?


கோபாலன்
பிப் 28, 2025 07:14

ஈமு கோழி சத்தியராஜ் ஞாபகம் வருது.


BalaG
பிப் 27, 2025 23:58

எவன் ஏமத்தறானோ அவனை விட்டுட்டு விளம்பரத்துல நடிச்சவங்களை பிடிச்சா மக்களுக்கு இழந்த பணம் திரும்ப வந்துடுமா


நல்லதை நினைப்பேன்
பிப் 27, 2025 19:06

வரவேற்கத்தக்கது. பணம் வாங்கிக்கொண்டு இப்படி உண்மைக்கு புறம்பாக வெளியிடும் செய்திகளால் மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள். இதில் நடிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பொறுப்பு துறக்க முடியாது என்ற ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். மருத்துவர் அல்லாதார் மருந்து பரிந்துரைக்க முடியாது. ஆனால் ஒரு நடிகன் இந்த வியாதிக்கு இந்த மருந்து சாப்பிடு என்கிறார். இது குற்றம் அல்லவா. மனைப்பிரிவு விளம்பரம் என்னவோ கண்கொள்ளா காட்சி. நேரில் சென்றால் பொட்டை திடல். 10 அடியில் நல்ல குடிநீர், ஆனால் 500 அடியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம். நான் இந்த விளயாட்டில் ஒரு லட்சம் சம்பாதித்தேன் என்கிறான். இவைகள் தடை செய்யப்பட்டு, அவர்களும் அதற்கு பொறுப்பு என்றால் ஒருத்தனும் வரமாட்டான்.


R Gopalan
பிப் 27, 2025 17:00

வேற என்ன பண்ணினா பிரயோஜனம் னு சொல்லுங்க


sathu
பிப் 27, 2025 15:42

Chit Fund-ல ஆரம்பித்து, Emu கோழி-ல பல ரவுண்டு சுருட்டி, இப்போ புது ட்ரெண்ட்டாக Crypto currency இல் இறங்கி இருக்கும் கோவை கம்பெனிக்கு வாழ்த்துக்கள். நம்மாளுங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாய்ங்க


Sridhar
பிப் 27, 2025 15:17

அப்பாவும் பிள்ளையுமே இந்த பிராடுல ஈடுபட்டு இருப்பானுங்களே? அந்த முதலைங்கள முதல்ல பிடிங்கயா.


Marimuthu Kaliyamoorthy
பிப் 27, 2025 15:29

collect the amount from the cini actors


இராம தாசன்
பிப் 27, 2025 21:47

அவர்களின் மூளை - மறுமாப்பிள்ளையை விட்டு விட்டிர்களே


Vijay D Ratnam
பிப் 27, 2025 15:09

அப்படியே அந்த விழாவுக்கு மேடை அமைத்து கொடுத்தவர், டெக்கரேஷன் செய்தவர், சமையல் செய்தவர், சாம்பார் வாளி தூக்கியவர்கள், டிரைவர்கள், வாட்ச்மேன் இவர்களுக்கும் சிக்கல் என்று சொல்லலாமே. நடிகைகள் சம்பளம் வாங்கிகொண்டு விளம்பரத்துக்கு வருகிறார்கள் இதுல அவர்களுக்கென்ன சிக்கல். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிச்ச கும்பலே குஜாலா இருக்காய்ங்க.


Barakat Ali
பிப் 27, 2025 14:54

இவர்களை ஒன்றும் செய்ய முடியாது .... சோர்ஸ் இருந்தா கட்டிங் வேணா கலெக்ட் பண்ண முடியும் ....


Shankar
பிப் 27, 2025 14:44

நடிகைகள் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக விளம்பர அடிப்படையில் பணம் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். இதற்காக அவர்களிடம் விசாரித்தால் என்ன கிடைக்கப்போகிறது.


புதிய வீடியோ