உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா

முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் 74ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 6ம் தேதி துவங்கியது.தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் தேர் இழுத்து, செடலணிந்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ