மேலும் செய்திகள்
செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம்
22-Jul-2026
புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் 35ம் ஆண்டு செடல் தேர் திருவிழா இன்று (23ம் தேதி) துவங்குகிறது. இன்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, தொடர்ந்து, 25ம் தேதி முதல் , 29ம் தேதி வரை தினமும் இரவு, 7 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. 30ம் தேதி அம்மன் வீதியுலா, 31ம் தேதி பகல் 12 மணிக்கு கூழ், பால் கஞ்சி வார்த்தல், பகல் 3 மணிக்கு செடல் திருவிழா நடக்கிறது. 5 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது. 1ம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், மாலை 6மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
22-Jul-2026