உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் தேசிய மாநாடு

புதுச்சேரி : மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில், செவிலிய துறையில் தரமான ஆராய்ச்சியின் புதிய முன்னோக்குகள் என்ற தலைப்பில் இரண்டாவது தேசிய அளவிலான மாநாடு நடந்தது. கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜராமன், மருத்துவ கல்லுாரி பதிவாளர் தட்சணாமூர்த்தி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி, செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்தமிழ்செல்வி, கஸ்துாரிபாகாந்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் புனித ஜோசப்பின் கலந்து கொண்டனர். தேசிய அளவில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வந்த புனித ஜோசபின், யமுனா, ஜெயந்தி, பாலமுருகன், விஜயலட்சுமி, சத்யகலா, சுரேந்திரன், நிர்மலா, கோட்டீஸ்வரபிரபு மற்றும் தமிழ்செல்வி பங்கேற்று சிறப்புரையாற்றினர். துணை பேராசிரியர் நித்யா செயலாளர் அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இணை பேராசிரியர் ஆயீ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ