உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவில் சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்

தேசிய அளவில் சிலம்பம் போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்

புதுச்சேரி: தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பிடித்து, அரசுப் பள்ளி மாணவி புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவி ஹேமலோஷனி தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார். இவரது தந்தை மாரிமுத்து; கூலித் தொழிலாளி. தாய் சரண்யா. சமீபத்தில், வேளாங்கண்ணியில் நடந்த தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்று, 'சிங்கிள் ஸ்டிக்' பிரிவில் முதலிடம் பிடித்தார். சாதனை மாணவி ஹேமலோஷனிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனுவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.சந்தை புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஹேமலோஷனி கைவினை பொருட்களை உருவாக்குதல், ஓவியம் வரைதல், நடனம், சிலம்பம் என பன்முக கலைகளில் ஆர்வம் கொண்டு சிறந்து விளங்குகினார். காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனுவாசன் ஏற்பாட்டில், கடந்த இரு ஆண்டுகளாக, சிலம்ப பயிற்றுனர்கள் சங்கர், முத்துக்குமரன் ஆகியோரிடம் சிலம்பம் கற்று வருகிறார். பள்ளியில் அளிக்கும் சிலம்ப பயிற்சியால் வெற்றி பெற முடிந்தது என்றார்ஹேமலோஷனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை