| ADDED : மார் 23, 2024 11:38 PM
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரியில் தேசிய அளவில் மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உருவாக்குதல் செயற்கை நுண்ணறிவு பங்கு குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.முதல் நாள் கருத்தரங்கை புதுச்சேரி பல்கலைக் கழக பதிவாளர் ரஜ்னிஷ் பூட்டாணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதர் தெரசா மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் திருப்பதி, செவன் ஹில்ஸ் மருந்தியல் கல்லுாரி முதல்வர் நிரஞ்சன்பாபு, வெங்கடேஸ்வரா கல்வி குழும நிர்வாக இயக்குனர் ராஜிவ்கிருஷ்ணா, எக்ஸிக்யூடிவ் டைரக்டர் மவுஸ்மி, முதன்மை செயல் இயக்குனர் வித்யா, பொது மேலாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இரண்டாம் நாள் கருத்தரங்கில் பேராசிரியர்கள் அனிதா, ஜீவிதா, சபரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெங்கடேஸ்வரா கல்வி குழும அறக்கட்டளை சார்பில் ஜி.ஆர்.டி மருந்தியல் கல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்திற்கு சிறந்த முதல்வருக்கான விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.தேசிய அளவில் நடந்த கருத்தரங்கில் 25க்கும் மேற்பட்ட மருந்தியல் கல்லுாரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கரோலின்கிரேஸ், சென்னியப்பன் செய்திருந்தனர். வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லுாரி துணை முதல்வர் நிர்மலா நன்றி கூறினார்.