உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி நீதிபதி துவக்கி வைப்பு

தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி நீதிபதி துவக்கி வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று துவங்கிய மூன்றுநாள் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சட்டக்கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.பெரியக்காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், 41வது தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். புதுச்சேரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆனந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியை துவக்கி வைத்து, பேசுகையில், 'இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் தங்கள் வழக்காடு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற போட்டிகள் மூலம் மாணவர்களின் வழக்காடும் திறனை வளர்க்க முடியும். கோர்ட் தீர்ப்புகளை மாணவர்கள் திறம்பட படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.இரண்டாம் நாளான இன்று 8ம் தேதி முதன்மை சுற்று மற்றும் கால் இறுதி சுற்று போட்டியும், நாளை 9ம் தேதி அரை இறுதி மற்றும் இறுதி சுற்று போட்டி நடக்க உள்ளது. இந்திய முழுதும் இருந்து 35 சட்டக்கல்லுாரி அணிகள் பங்கேற்கின்றன.போட்டி நடுவர்களாக பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள் செயல்பட உள்ளனர். இறுதி போட்டியில் நடுவர்களாக ஐகோர்ட் நீதிபதிகள் கலந்துகொள்கின்றனர். நிறைவு விழாவில், ஐகோர்ட் நீதிபதிகள் திலகவதி, தமிழ்செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். உதவிப் பேராசிரியர் நைனி சிங் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை