உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நட்டா 15ம் தேதி புதுச்சேரி வருகை

நட்டா 15ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து தேசிய தலைவர் நட்டா வரும் 15ம் தேதி புதுச்சேரியில்நடைபெறும் ரோடு ேஷாவில் பங்கேற்கிறார்.புதுச்சேரி பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம், மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வன்ஷனில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் செல்வகணபதி பேசியதாவது:புதுச்சேரியில் பா.ஜ., வளர்ந்துள்ளது. மற்ற கட்சிகள் நம் வளர்ச்சியை பார்த்து பிரமிக்கின்றனர். லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., நிர்வாகிகள் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய தலைவர் நட்டா, நாளை மறுநாள் 15ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். நம் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அன்றை தினம் அண்ணா சிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை ரோடு ேஷாவில் கலந்து கொள்கிறார்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ