உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் சென்ற வாலிபரை வெட்டிய 2 பேருக்கு வலை

பைக்கில் சென்ற வாலிபரை வெட்டிய 2 பேருக்கு வலை

புதுச்சேரி : தங்கையை பைக்கில் அழைத்து சென்ற சகோதரனை வழிமறித்து கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.லாஸ்பேட்டை, கலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிரிசங்கர், 21. இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து முடித்துள்ளார். டியூஷன் படிக்கும் தனது தங்கையை நேற்று பைக்கில் அழைத்து கொண்டு, உழவர் சந்தை வழியாக சென்று கொண்டிருந்தார். கருவடிகுப்பத்தை சேர்ந்த லோகேஷ், பழனி இருவரும் கிரிசங்கரை வழிமறித்து தகராறு செய்தனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, இருவரும் சேர்ந்து கிரிசங்கரை கத்தியால் வெட்டினர். படு காயமடைந்த, அவர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, லோகேஷ், பழனி ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை