உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுயேச்சை எம்.எல்.ஏ.,வுக்கு புதிய கார் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி

சுயேச்சை எம்.எல்.ஏ.,வுக்கு புதிய கார் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி

புதுச்சேரி: கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவால், சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளனுக்கு புதிய கார் வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,களுக்கு கார்கள் வழங்கப்பட்டன. ஆனால் திருபுவனை தொகுதி பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளனுக்கு மட்டும் புதிய கார் வழங்கவில்லை. பழைய இன்னோவா காரில் தொகுதி நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார்.சட்டசபையில் கடந்த பிப்., மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது எம்.எல்.ஏ.,கள் அனைவரும் அரசு காரில் வந்து இறங்க, அங்காளன் எம்.எல்.ஏ., மட்டும் தனது பைக்கில் வந்து கலந்து கொண்டார். அரசு கொடுத்த கார் அடிக்கடி மக்கர் செய்ததால் தனது பைக்கில் வந்தாக தெரிவித்து, தனக்கு புதிய கார் வழங்க வேண்டும் என, தெரிவித்து இருந்தார்.ஆனாலும், அவருக்கு புது கார் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அதிருப்தியடைந்த அவர், தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் இன்னோவா காரை கடந்த மார்ச் மாதம் சபாநாயகரை சந்தித்து ஒப்படைத்தார். இதனிடையே புதுச்சேரி கவர்னராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதும், கடந்த 20ம் தேதி அவரை மரியாதை நிமித்தமாக அங்காளன் எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். அப்போது, தனக்கு கார் வழங்கப்படாதது குறித்து கவர்னரிடம் தெரிவித்து இருந்தார்.அதையடுத்து முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய கவர்னர், உடனடியாக அங்காளன் எம்.எல்.ஏ.,விற்கு புதிய காரை வழங்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, தற்போது அமைச்சராக பொறுப்பேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ள திருமுருகனின் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார், அங்காளன் எம்.எல்.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி