உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச தரத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு

சர்வதேச தரத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு

புதுச்சேரி: புதிய குற்றவியல் சட்டங்கள் சர்வதேச தரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது என, சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் நடந்த விழாவில், அவர், பேசியதாவது:மத்திய அரசின் 3 புதிய சட்டங்களும் மிக மிக அவசியமானது. அனைவருக்கும் நியாயம் விரைவாக கிடைக்க வேண்டும் என்பது இச்சட்டங்களின் நோக்கம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சில நேரம் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். புதுச்சேரியில் சமீபத்தில் சிறுமி கொலை சம்பவத்தில் கூட குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்க கோரிக்கை எழுந்தது. ஆனால் சட்டத்தின் முன்பு அதற்கான நடைமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.பெண்கள் பாதுகாப்புக்காக புதிய குற்றவியல் சட்டத்தில் பல சட்டங்கள் உள்ளது. இது எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் முழு அதிகாரமும் யாருடைய கையிலும் கொடுக்க விரும்பாமல், சிந்தித்து இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மனித உரிமை, தகவல் அறியும் உரிமை, பெண் பாதுகாப்பு என சர்வதேச தரத்தில் இச்சட்டங்கள் வந்துள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு, போலீஸ், சட்டத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்களிடம் இருக்கிறது. இச்சட்டம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் இருக்கலாம். போலீசாருக்கு உதவி தேவைப்பட்டால், சட்டத்துறை உடனடியாக ஆலோசனை வழங்க தயாராக உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை