உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரலாற்று சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

வரலாற்று சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி : வரலாற்று சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதுச்சேரி வரலாற்று சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நல்லாம் கிளினிக் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், 2024 - 27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.சங்கத்தின் கவுரவ தலைவர் நல்லாம், புதிய தலைவராக கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன், துணைத் தலைவர்களாக ராமதாஸ், வழக்கறிஞர் மரி அன்னா தயாவதி, செயலாளராக கஸ்பார் முத்தப்பா,துணை செயலாளர்களாக கலைச்செல்வி, சார்லஸ் ஜெகம் பிரின்ஸ், பொருளாளராக கோபிராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், வரலாற்று சங்கத்தின் இயக்குனர்கள், செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ