| ADDED : ஏப் 06, 2024 05:23 AM
புதுச்சேரி: தேர்தல் விதிகளை மீறியதாக என்.ஆர்.காங்., பா.ஜ.,விற்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தல் பிரசாரதின்போது முதல்வர் ரங்கசாமி முதியோர் பென்ஷன் தொகை உயர்த்துவது தொடர்பாக பேசினார். இது தொடர்பாக தேர்தல் துறையின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, என்.ஆர்.காங்., - பா.ஜ.,விற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.அதில் தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள் அல்லது சலுகைகள், நிதி மானியம், அடிக்கல் நாட்டல் உள்ளிட்டவைகளை வாக்குறுதிகளாக தெரிவிக்க கூடாது என்பதால் அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.இதேபோல் அரசியல் கட்சி வேட்பாளர் விளம்பரங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் புகைப்படம், சின்னம், லோகோ இடம் பெற கூடாது. ஆனால் சமூக வளைதளத்தில் பா.ஜ., தேர்தல் விளம்பரத்தில் இடம் பெற்றதாக பா.ஜ.,வின் பொது செயலாளருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி இரு கட்சிகளும் இன்றுக்குள் தங்களது விளக்கத்தினை தேர்தல் துறைக்கு அனுப்ப உள்ளன.