உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 168 பி.பார்ம் சீட்டுகள் அறிவிப்பு

அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 168 பி.பார்ம் சீட்டுகள் அறிவிப்பு

புதுச்சேரி: அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இந்தாண்டு மொத்தம் 168 பி.பார்ம் சீட்டுகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, துணை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்து, அரசு ஒதுக்கீட்டு இடங்களை வெளியிட்டு வருகிறது.அதன்படி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் இந்தாண்டு நிரப்பப்பட உள்ள பி.பார்ம் சீட்டுகள் பற்றிய விபரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது. அரசு கல்லுாரியை பொருத்தவரை மதர்தெரசா சுகாதார நிலையத்தில் மொத்தம் 59 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது. இவை, புதுச்சேரி மாணவர்களுக்கு 36 சீட்டுகள், காரைக்கால்-9, ஏனாம்-1, மாகி-1 சீட்டுகள் பிராந்திய ரீதியாக நிரப்பப்படும்.இதுதவிர புதுச்சேரிக்கான சுயநிதி இடங்கள்-3, பிற மாநில மாணவர்களுக்கான சுய நிதி இடங்கள்-7 என்.ஆர்.ஐ.,-1 என்று நிரப்பப்பட உள்ளது. தனியார் கல்லுாரிகளை பொருத்தவரை மணக்குளவிநாயகர்-30, வெங்கடேஸ்வரா-50, ராக்- மொத்தம் 110 பி.பார்ம் சீட்டுகள் உள்ளன. இந்த 110 சீட்டுகளும் பொது-55, ஓ.பி.சி.,-12, எம்.பி.சி.,-20, எஸ்.சி.,-18, மீனவர்-2, முஸ்லீம்-2, பி.டி.,-1 என்ற இட ஒதுக்கீட்ட அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக விடுதலை போராட்ட வீரர்-4, மாற்றுத்திறனாளி-6, முன்னாள் ராணுவ வீரர்-3, விளையாட்டு வீரர்-1 சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளது.மதர் தெரசா கல்லுாரியில் ஒரு சீட் என்.ஆர்.ஐ., ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த ஒரு இடத்தினை தவிர்த்து மீதமுள்ள 58 சீட்டுகளும், தனியார் கல்லுாரிகளில் 110 என மொத்தம் 168 பி.பார்ம் சீட்டுகள் இந்தாண்டு சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை