உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதியவர் கொடூர கொலை? போலீசார் விசாரணை

முதியவர் கொடூர கொலை? போலீசார் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் படுத்திருந்த சைக்கிள் ரிக் ஷா ஓட்டிய தொழிலாளி மீது கல்லை போட்டு கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி செஞ்சி சாலை, பழைய சட்டக் கல்லுாரி பின்புறம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில், முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதியவர் இறந்து கிடந்த இடத்தில், பெரிய கான்கிரீட் கல் கிடந்தது. அதில், ரத்தகரை படிந்து இருந்து. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், கொலை செய்யப்பட்ட முதியவரின் பெயர் முருகன், 70, என்பதும், முத்தியால்பேட்டை பகுதியில் தங்கி இருந்து சைக்கிள் ரிக் ஷா ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. கண் பார்வை பாதிக்கப்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக சைக்கிள் ரிக்ஷா ஓட்டாமல், செஞ்சி சாலையோரத்தில் தங்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் உதவிகள் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.மக்கள் கொடுத்த பணத்தை சேர்த்து வைத்திருந்து, அதனை அப்பகுதியில் சுற்றி திரிபவர்களுக்கு கொடுக்காமல் இருந்ததால் ஏற்பட்ட முன்விரோத்தில், அவர் மீது கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.முதியவர் கொலை செய்யப்பட்ட இடம் அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முதியவர் புதுச்சேரியை சேர்ந்தவரா, அல்லது தமிழக பகுதியை சேர்ந்தவரா என்பது குறித்தும், அவரின் குடும்ப விபரங்களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி