உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

பாகூர் : பாகூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.பாகூர் பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி முத்தம்மாள், 79. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். தினமும், பாகூர் - குடியிருப்புபாளையம் சாலையில் உள்ள அவரது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார். நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலை 4:00 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, வரப்பின் குறுக்கே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பி அவரது காலில்பட்டுள்ளது. அவரை மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மகன் நாகராஜன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹமீது உசேன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை