உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நமச்சிவாயத்தை ஆதரித்து ஓம்சக்தி சேகர் ஓட்டு சேகரிப்பு

நமச்சிவாயத்தை ஆதரித்து ஓம்சக்தி சேகர் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பிரசாரம் செய்தார்.புதுச்சேரியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அவர், நெல்லித்தோப்பு தொகுதியில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அந்த தொகுதியில் உள்ள,ஜே.வி.எஸ்.நகர், தோட்டக்கால், காராமணி குப்பம், நல்லாண்டு மேஸ்திரி வீதி, வினோபா வீதி, மடத்து வீதி உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அவருக்குசால்வை அணிவித்து பொதுமக்கள்வரவேற்றனர். பிரசாரத்தில், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்