உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை 

அங்காள பரமேஸ்வரிக்கு ஏகதின லட்சார்ச்சனை 

புதுச்சேரி: புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று 45ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 11 மணி வரையிலும், 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும், 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஆகிய ஐந்து வேளையும் நடந்த லட்சார்ச்சனையில் பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ