மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
வானுார்: புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில், கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தில் ஒரு மணி நேரத்துக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலையில் கீழ்கூத்தப்பாக்கம் - கிளியனுார் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்காததால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வந்தது.இதையடுத்து, அப்பகுதியில் ரூ. 20.57 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது.580 நீளத்தில் மேம்பாலமும், 950 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் மேம்பால பணிகள் முடிந்தாலும், ஒரு சில பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.குறிப்பாக, புதிய மேம்பாலத்தின் மேலாக, கிளியனுார் - கீழ்கூத்தப்பாக்கம் இடையிலான உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால், மேம்பாலத்தில் டிப்பர், கன்டெய்னர் லாரிகள், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது மின்சார கம்பியில் உரசும் அபாயம் உள்ளது.கடந்த வாரம் 6ம் தேதி, மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. மேம்பாலத்தை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உயர் மின்னழுத்த கம்பி மேம்பாலத்தின் மீது தாழ்வாக செல்வதால், உயரத்தை அதிகரிக்க அறிவுறுத்தினர்.இதற்கிடையில், புதிய மேம்பாலத்தை நேற்று காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு திறந்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'மேம்பாலத்தின் மேலாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை இன்னும் ஒரு மீட்டருக்கு உயர்த்த வேண்டியுள்ளது.இதற்காக மின்சார வினியோகத்தை நிறுத்துவதற்கு, திண்டிவனம் மின்வாரிய அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவர்களும், இந்த வார துவக்கத்தில், மின் இணைப்பை துண்டித்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பியை ஒரு மீட்டருக்கு உயர்த்தி கட்டி முடித்ததும், மேம்பாலம் வாகன போக்குவரத்திற்கு திறந்து விடப்படும்' என்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago