உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஓராண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஓராண்டு சிறை

புதுச்சேரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த சென்னை வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.சென்னை துரைப்பாக்கம் பெருங்குடியைச் சேர்ந்தவர் பிரவீன்.22; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு 17வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பாலியல் தொல்லை தந்துள்ளார்.தனது விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்.இதனால், அந்த சிறுமி, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அப்போதும் பிரவீன் தொடர்ந்து சிறுமிக்கு ஆபாசபட மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் பிரவீனை கைது செய்த முதலியார்பேட்டை போலீசார், அவர் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட பிரவீனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 12ன் கீழ் ஓராண்டு சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை